ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரைப் பகுதியில் புரெவி புயல் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. புயல் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசிவருகிறது. இதனால் பாம்பன் பாலத்தின் வடக்குப் பகுதியில் பேரலைகள் உருவாகி கரையை வந்து மோதுகின்றன.
புரெவி புயல்: பாம்பன் பகுதியில் கடல் நீர்மட்டம் உயர்வு - பாம்பன் பாலம்
ராமநாதபுரம்: புரெவி புயல் காரணமாக பாம்பன் பகுதியில் இயல்புநிலையைவிட கடல் நீர்மட்டம் 20 அடி அளவிற்கு கரையை நோக்கி வந்துள்ளது.
Cyclone
புரெவி புயல் காரணமாக பாம்பன் பகுதியில் இயல்புநிலையைவிட கடல் நீர்மட்டம் 20 அடி அளவிற்கு கரையை நோக்கி வந்துள்ளது. நண்பகலைக் கடந்தும் தற்போதுவரை பாம்பன் பகுதி இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. சூரைக்காற்றும், கடல் பெருக்கும், அதிகப்படியான அலையும் இருப்பதால் அச்சமான சூழல் உருவாகியுள்ளது.