ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட திணை குளம், வண்ணாங்குண்டு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் மழைநீரை சேமிப்பதற்காக ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் பைப்புகள் கொண்டு பாலம் அமைக்கப்பட்டது.
தரமற்ற கட்டுமானம்: மழைக்கு தாங்க முடியாமல் இடிந்து விழுந்த பாலம்! - Bridge thrashed in heavy rain in Tirupalani
ராமநாதபுரம்: ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டிய நீர்வழிப் பாலம் மழைக்கு தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது.
![தரமற்ற கட்டுமானம்: மழைக்கு தாங்க முடியாமல் இடிந்து விழுந்த பாலம்! Bridge](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-bridge-0811newsroom-1604830807-1029.jpg)
இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் இரண்டு நாட்களாக ராமநாதபுரத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இது குறித்த வீடியோவை கிராம மக்கள் சமூக வலைதளத்தில் பரப்பியதை தொடர்ந்து, இன்று (நவம்பர் 8) அவசர அவசரமாக பாலம் இடிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வரி பணத்தை அரசு முறையாக கையாண்டு பாலத்தை கட்டாமல் தரமற்ற கட்டுமானம் மூலமாக பணத்தை வீணடிக்கிறது என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தரமான பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.