தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தினமும் 300 நபர்களுக்கு இலவச தேநீர் வழங்கும் பிராமணர் சங்கம் - தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பிராமணர் சங்கம் சார்பாக தினமும் 300 நபர்களுக்கு இலவசமாக தேநீர் வழங்கி வருகின்றனர்

இராமநாதபுரம்: இராமேஸ்வரம் பகுதியில் பணி செய்யும் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினருக்கு பிராமணர் சங்கம் சார்பாக தினமும் இலவசமாக தேநீர் வழங்கி வருகின்றனர்.

தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பிராமணர் சங்கம் சார்பாக தினமும் 300 நபர்களுக்கு இலவசமாக  தேநீர் வழங்கி வருகின்றனர்
தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பிராமணர் சங்கம் சார்பாக தினமும் 300 நபர்களுக்கு இலவசமாக தேநீர் வழங்கி வருகின்றனர்

By

Published : Apr 30, 2020, 9:32 PM IST

கரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் ஊரடங்குப் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைக் பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு இராமேஸ்வரம் பிராமணர் சங்கம் மற்றும் சங்கர மடம் சார்பில் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக தேநீர் வழங்கி வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பிராமணர் சங்கம் சார்பாக தினமும் 300 நபர்களுக்கு இலவசமாக தேநீர் வழங்கி வருகின்றனர்

இது குறித்து பிராமணர் சங்கத்தை சேர்ந்த ஜாச்சா என்பவரிடம் கேட்டபோது கரோனா வைரஸ் தடுப்பு பணியில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்துடன் நாள் முழுவதும் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு காலை மாலை வேளைகளில் தேநீர் கொடுக்க வேண்டும் என்று பிராமணர் சங்கம் மற்றும் சங்கர மடம் இணைந்து முடிவு செய்து தினசரி காலை, மாலை என இரு வேளைகளில் 300 நபர்களுக்கு தேநீர் வழங்கி வருகிறோம் இதன் மூலம் அவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details