தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்! - Black flag struggle

ராமநாதபுரத்தில் வன்னியருக்கு கொடுக்கப்பட்டுள்ள உள் இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

வன்னியருக்கு உள் இடஒதுக்கீடு எதிர்த்து கருப்புக்கொடி
வன்னியருக்கு உள் இடஒதுக்கீடு எதிர்த்து கருப்புக்கொடி

By

Published : Mar 8, 2021, 2:45 PM IST

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சமுதாயத்தினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை அறிவித்து தமிழ்நாடு அரசானது சமீபத்தில் உத்தரவிட்டது.

இதற்கு சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (மார்ச்8) ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ். மடை கிராமத்தில் வன்னியருக்கான உள் இடஒதுக்கீட்டை கண்டித்து, கிராமத்தின் நுழைவுவாயில் பகுதி, வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:டி.டி.வி.தினகரன் மீதான அவதூறு வழக்கு ரத்து!

ABOUT THE AUTHOR

...view details