ராமநாதபுரம்:தமிழ்நாடு முழுவதும் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனுதாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியும் தற்போது தமிழ்நாடு முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சாதியும், மதமும் ஆதிக்கம் செலுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், இங்கு இப்பேரூராட்சியின் தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை சுழற்சி முறையில் தேர்வு செய்யவது வழக்கமாக இருந்து வருகிறது.
இங்குள்ள 15 வார்டுகளுக்கும் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக அதிமுக 2, பாஜக 6, திமுக 8, கம்யூனிஸ்ட் 1 என இங்குள்ள வார்டுகளில் போட்டியிட்டன. இங்குள்ள அனைத்து வார்டுகளிலும் சுயேச்சைகள்தான் அதிகளவில் போட்டியிடுகின்றனர். அனைத்து வார்டுகளிலும் மொத்தம் 46 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.