இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கட்டப்பட்டு வரும் கழிப்பறைகள் தரமற்றதாக இருப்பதாகவும், மத்திய அரசின் திட்டங்களான பசுமை வீடு உள்ளிட்டவைகளை முறையாக பயன்படுத்தாததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்! - Ramanathapuram latest news
இராமநாதபுரம்: பாஜகவினர் மத்திய அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்த வலியுறுத்தி கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
bjp-siege-in-ramanathapuram-union-office
இதையடுத்து, முறையாக திட்டங்கள் பயன்படுத்தப்படும் என்று அலுவலர்கள் உறுதியளித்ததையடுத்து பாஜகவினர் வாக்குவாதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக, பாஜகவினர் கடலாடி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மத்திய அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் ரவுடி கல்வெட்டு ரவி கைது!