ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ராமநாதபுரம் வருகை தந்தார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ராமநாதபுரம் வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக கைப்பற்றும் என ஸ்டாலின் பேசிவருகிறார். அவருக்கு மக்கள் நலனில் எந்த எண்ணமும் இல்லை. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. ஆனால், 40 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும்” என தெரிவித்தார்.
மேலும், தேசிய அளவில் 300 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.