ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே போகலூர் யூனியன் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைப்பதற்கு பிடிஓ அனுமதி மறுத்தார். இதனால் கடந்த நவம்பர் 23ஆம் தேதி பாஜக ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் தலைமையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பாஜகவினர் சுவரில் பொருத்திவிட்டுச் சென்றனர்.
அதை பிடிஓ ராஜகோபால் அகற்றியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து இன்று (நவ. 30) பாஜகவினர் மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு, பிடிஓவிற்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து பாஜகவினர் நடை பயணமாகச் சென்று போகலூர் யூனியன் அலுவலகத்தில் மோடியின் புகைப்படத்தை வைப்பதற்கு அனுமதி கோரினார்.