ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரேன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அடிக்கடி முத்துராமலிங்க தேவர் பற்றி பேசுவார். தேவர் பின்பற்றிய தேசியமும் தெய்வீகமும் என்ற வழியில்தான் பாஜக இயங்கி வருகிறது. ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு பாஜக வரவேற்கிறது.