ராமநாதபுரம்:இமானுவேல் சேகரன் 64ஆம் ஆண்டு நினைவு நாள் பரமக்குடியில் பலத்த கட்டுப்பாடுகளுடன் நேற்று (செப். 11) அனுசரிக்கப்பட்டது. அதில், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், பாஜக சார்பில் இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணையமைச்சர் முருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பரமக்குடியில் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு தேவேந்திரன் - நரேந்திரன்
இதையடுத்து, செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, "இமானுவேல் சேகரனின் 64ஆம் ஆண்டு நினைவு நாளன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, 'தேவேந்திரன்' என்ற பெயரைக் கேட்கும்போது 'நரேந்திரன்' என்று கேட்கிறது எனப் பெருமையுடன் தெரிவித்தார்" என அந்நிகழ்வை நினைவுகூர்ந்தார்.
மேலும், நீண்டகால கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது பெருமைக்குரியது” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் - விரைவில் நல்ல முடிவு?