ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல்,பெரிய கண்மாய் சக்கரக்கோட்டை , மேலக் கீழேச் காஞ்சிரங்குடி, சித்தார்கோட்டை என்று ஐந்து பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இந்த பறவைகள் சரணாலயங்களில் நத்தை கொத்தி நாரை, கரண்டிவாயன் மூக்கன், பூநாரை, உள்ளிட்ட பல்வேறு வகையான வெளி, உள்நாட்டு வலசைப் பறவைகள் வந்து தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறித்து மார்ச் மாதக் கடைசியில் மீண்டும் திரும்பி செல்லும்.
இதனையொட்டி, இன்றும், நாளையும் (பிப்.17,18) பறவை கணக்கெடுக்கும் பணி பறவையியலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியின்போது செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் உடனிருந்து கணக்கெடுக்கும் பணியை செய்தனர்.