ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகூர்சுபைர் அலி (27), தங்கதுரை(26). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் உச்சிப்புளியிலிருந்து புதுமடத்துக்கு சென்றுகொண்டிருந்தனர்.
குடிபோதையில் இருந்த அவர்கள் பாலத்தில் சென்றபோது நிலைதடுமாறி பாலத்தின் பாதுகாப்புச் சுவரில் மோதினர். இந்த விபத்தில் பாலத்திலிருந்து கீழே தூக்கிவீசப்பட்ட இருவரும், தலையில் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.