மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து பக்தர்கள் குவிந்தனர். ஏற்கனவே மாவட்ட நிர்வாகம், காவல் துறையின் சார்பாக அக்னி தீர்த்த கடலில் நீராடுவதற்கும், அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து தர்ப்பனம் செய்யவும் கரோனா தொற்று பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
மஹாளய அமாவாசை... அக்னி தீர்த்த கடற்கரையில் குளிக்க தடை
ராமநாதபுரம்: மஹாளய அமாவாசையால் ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்களை அக்னி தீர்த்த கடற்கரையில் குளிக்க தடைவிதித்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடற்கரையில் குளிக்க தடை
மேலும் அந்த பகுதிக்கு செல்லாதவாறு காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் தடைகளை அமைத்து தடுத்தனர். கோயிலுக்குள் செல்வதற்கு முன்னரே பக்தர்கள் கைகளை சுத்தம் செய்வதற்கு சானிடைசர் வழங்கப்படுகிறது. மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் தகுந்த இடைவெளி கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர்.