தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலாவிடம் பேசிய அதிமுக தொண்டர் - பரவும் ஆடியோ!

அதிமுக தொண்டர் ஒருவர் சசிகலாவிடம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதிமுக தொண்டர்
அதிமுக தொண்டர்

By

Published : Jun 8, 2021, 9:21 PM IST

ராமநாதபுரம்: அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்பட்ட ஆடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சமீபகாலமாக கட்சித் தொண்டர்களிடம் போனில் தொடர்பு கொண்டு சசிகலா பேசி வருதாகக் கூறப்படுகிறது. இந்த ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில், ராமநாதபுரம் அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா பேசியதாக கூறப்படும் ஆடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சசிகலாவிடம் அதிமுக தொண்டர் பேசும் ஆடியோ

அந்த ஆடியோவில் தொண்டர் பேசுகையில், “அப்போது தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிக அளவில் இருந்தது. வன்னியருக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தால் தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் வாக்கு வங்கியை இழந்துவிட்டோம்.

இதனால் அங்கு வெற்றிபெற முடியவில்லை. தலைவர், அம்மா காலத்தில் அடிமட்ட தொண்டன் கூட எம்எல்ஏ ஆகலாம் என்று இருந்தது, ஆனால் தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை. தற்போது கட்சி தலைமை இல்லாமல் இருப்பதால், நீங்கள் தலைமை ஏற்பதற்கு வரவேண்டும். உங்களிடம் பேசியதற்கு என்னை கட்சியிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை, கட்சி பாதுகாக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, நான் வருவேன், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் சசிகலா கூறுகிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: பிரான்ஸ் அதிபரை அறைந்த சம்பவம்: இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details