தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு 9 கிலோ தங்கம் கடத்த முயற்சி! - gold smuggling at ramanathapuram sea

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்குப் படகு மூலம் கடத்தப்பட்ட 9 கிலோ தங்கத்தை, மத்திய வருவாய்ப் புலனாய்வு அமலாக்கத் துறை பறிமுதல்செய்தது.

தங்கம்
தங்கம்

By

Published : Dec 11, 2020, 1:19 PM IST

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்குப் படகு மூலம் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், இந்தியக் கடலோரக் காவல் படையினர் நள்ளிரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இந்தியா இலங்கை எல்லை கடல் பகுதியில் சுற்றித்திரிந்த படகை நிறுத்தி சோதனை செய்ததில், தங்கம் கடத்தப்படுவது உறுதியானது. சுமார் 9.7 கிலோ தங்கம் இருந்ததாக கணக்கிட்டுள்ளனர்.

இதையடுத்து, ஐந்து பேரையும் கைதுசெய்த காவல் துறையினர், இந்தியக் கடலோரக் காவல் படை முகாம் தளத்தில் வைத்து விசாரணை நடத்திவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details