ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயேந்திரருக்கே கருவறைக்குள் அனுமதியில்லை: தமிழ்-மகாராஷ்டிர பிராமணர்களுக்கிடையே வாக்குவாதம்! - தமிழ் பிராமணருக்கும், மஹாராஸ்டிரா பிராமணருக்கும் இடையே மோதல்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவரைக்குள் காஞ்சி விஜயேந்திரரை அனுமதிக்காத மகாராஷ்டிர பிராமணர்களுடன் தமிழ் பிராமணர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தமிழ் பிராமணருக்கும் மஹாரஸ்ட்டிர பிராமணருக்கும் இடையே வாக்குவாதம்
தமிழ் பிராமணருக்கும் மஹாரஸ்ட்டிர பிராமணருக்கும் இடையே வாக்குவாதம்
author img

By

Published : Feb 23, 2021, 11:55 AM IST

தமிழ் பீடாதிபதிகளில் முக்கியமாகத் திகழ்பவர் காஞ்சி விஜயேந்திரர். இவர் கடந்த இரு நாள்களுக்கு முன் ராமேஸ்வரம் வந்திருந்தார். காஞ்சி சங்கரமடத்தில் சிறப்பு யாகம், பூஜைகளில் ஈடுபட்ட அவர் நேற்று (பிப். 22) காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றார்.

அப்போது, அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தக்காரும் இணை ஆணையரும் பூரண கும்ப மரியாதைசெய்து வரவேற்று, கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், சுவாமி சன்னதிக்குச் சென்ற விஜயேந்திரர், பூஜை செய்வதற்காக கருவறைக்குச் செல்ல முயலும்போது ஏற்கனவே கருவறைக்குள் இருந்த பாரம்பரியமான மகாராஷ்டிர பிராமணர்கள் அவரை கருவறைக்குள் செல்ல மறுத்தனர்.

இதன்பின் தமிழ் பிராமணர்களுக்கும் - மகாராஷ்டிர பிராமணர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. அப்போது, அங்கிருந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து விஜயேந்திரரை கருவறைக்குள் செல்ல அனுமதித்தனர். பின்னர், காஞ்சி விஜயேந்திரர் சிறப்பு தீபாராதனை செய்தார்.

இதையும் படிங்க: அத்திவரதர் வைபவத்திற்கு அரசு நிதி ஒதுக்கவில்லை - கோயில் நிர்வாகத்தின் பதிலால் பக்தர்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details