ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயர் நேற்றிரவு வயது மூப்பின் காரணமாக காலமானார். சாதி, மத பேதமின்றி அனைவரும் அப்துல் கலாமின் அண்ணன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, ஜமாத்தார்கள் முன்னிலையில் துவா ஓதி முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளியில் வைத்து உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் கலந்துகொண்டனர்.