ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் மூவாயிரத்து 691 உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தேர்தல் 2019 டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் 11 ஒன்றியங்களில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
குறிப்பாக அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதரியா மண்டபம் ஒன்றியம் இரண்டாவது வார்டில் போட்டியிட்டார். இவர் ஆயிரத்து 343 வாக்குகள் பெற்றார். இவரைவிட திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஆயிரத்து 62 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.