தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் மத்திய அரசைக் கண்டித்து  மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் - ராமநாதபுரத்தில் 32 இடங்களில் மீத்தேன் திட்டம்

ராமநாதபுரம்: மாவட்டத்தில் 32 இடங்களில் அமைய உள்ள மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பினர்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Anti-Methane Coalition protest for methane projects in ramnad
Anti-Methane Coalition protest for methane projects in ramnad

By

Published : Sep 7, 2020, 2:44 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்ற பகுதி உள்பட மாவட்டத்தின் 32 பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது.

இதன்மூலம் நிலத்தடி நீர் சீர்கேடு அடைவதுடன் அழகன் குளம் பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் எச்சங்கள் அழிந்து போகும் வாய்ப்புகள் உள்ளன.

இதனை மத்திய மாநில அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி ராமநாதபுரம் பாரதி நகர் பேருந்து நிலையம் அருகே மீத்தேன் எரிவாயு எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக பெரியார் பேரவை நாகேஷ்வரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆர்பாட்டத்தின்போது, மத்திய மாநில அரசுகள் ராமநாதபுரத்தில் மீத்தேன் திட்டத்தின் மூலமாக நீர்வளத்தைச் சீர்கெடும் இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details