தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடல் அட்டைகள் கடத்தல் - அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை - வேர்கோடு

இராமேஸ்வரம் அருகே கடல் அட்டைகள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கடல் அட்டைகள் கடத்தல்
கடல் அட்டை கடத்தல்காரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

By

Published : Aug 10, 2021, 5:09 PM IST

இராமநாதபுரம் : இராமேஸ்வரம் வேர்கோடு பகுதியை சேர்ந்தவர் வில்லாயுதம். இவர் திமுக மாவட்ட மீனவர் அணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றதாக காவல்துறையினர் அவரை கைது செய்தனர். ஆனால் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவர் தற்போது இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகார்

வில்லாயுதம் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், முறையாக வருமான வரி செலுத்தவில்லை எனவும் அமலாக்கத்துறையினருக்கு புகார்கள் வந்தன.

இந்நிலையில், வேர்கோடு பகுதியில் உள்ள வில்லாயுதம் வீட்டிற்கு அமலாக்கத்துறையின் உதவி இயக்குனர் தலைமையில் நேற்று சென்ற 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

விசாரணை

இதேபோல் தங்கும் விடுதி, மற்றும் குடோன் உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவரின் குடும்பத்தினர்களிடம் விசாரணை நடத்தினர்.


சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது. அப்போது பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. உரிய விசாரணைக்கு பிறகு சொத்துக்களின் மதிப்பு தெரியவரும் அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தடை

கடந்த 2000-ம் ஆண்டு, கடல் அட்டைகளை அழிந்துவரும் இனப்பட்டியலில் சேர்த்து, இந்தியாவில் கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், மலேசியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் கடல் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால், கடலோர மாவட்டங்களில் பணத்துக்காக கடல் அட்டைகளைப் பதுக்கி சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவதும், பிடிபடுவதும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :வாளுடன் வீடியோ - இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details