இராமநாதபுரம் மாவட்டம் காட்டுப்பரமக்குடி அருகே உள்ள பாம்பு விழுந்தான் கிராமத்தில் ராக்கப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் திடல் பகுதியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சிவகுமார், ஊர்த்தலைவர் பூமிநாதன் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களின் துணையுடன் பரமக்குடியைச்சேர்ந்த ஆசிரியர் சரவணன் ஆய்வுப் பணியில் நேற்று ஈடுபட்டுள்ளனர்.
அந்தசமயத்தில் அங்கு குழி ஒன்று தோண்டும் போது பழங்கால சுடுமண் உறைகிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது கீழடி அகழாய்வில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள சுடுமண் உறைகிணற்றின் வடிவத்தை ஒத்துள்ளது.
மேலும், இப்பகுதியில் வேலைப்பாடுகள் மிக்க மண்பாண்டங்கள், மண்டை ஓடுகள் போன்றவை கிடைத்துள்ளன. வைகை ஆற்றங்கரையில் பரவியுள்ள வைகை நாகரிக தொல்லியல் மேடுகளில் பரமக்குடி பாம்பு விழுந்தான் என்ற இடமும் ஒன்றாகும்.
ஆகவே பாம்பு விழுந்தான் கிராமத்தில் தமிழ்நாடு அரசும், தொல்லியல் துறையும் முறையாக அகழாய்வு செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆசிரியர் சரவணன் கடந்த மாதம் பரமக்குடி தாலுகாவிற்குட்பட்ட கலையூர் தொல்லியல் மேட்டில் இருந்து சமீபத்தில் முதுமக்கள் தாழி ஒன்றினை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:5ஆம் கட்ட கீழடி அகழாய்வு - நூலாக வெளியிட்ட தமிழ்நாடு தொல்லியல் துறை