ராமநாதபுரம்: கடலாடி அருகேவுள்ள காவாகுளம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டார்.
கிராம சபைக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த மதுப்பிரியர் ஒருவர், ’ஒரு குவார்ட்டர் விலை 200 ரூபாய்க்கு அநியாயமாக விற்கப்படுவதாக’ அமைச்சரிடம் புகார் தெரிவித்தார்.