ராமநாதபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அருகே அக்னித் தீர்த்த கடற்கரையில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சித்திரை அமாவாசையை முன்னிட்டு, அங்குவந்த திரளான பக்தர்கள் தங்கள் முன்னோர்களை வழிபட்டு கடலில் புனித நீராடினர். பின்னர் ராமநாதசுவாமியை வழிபட்டனர்.
சித்திரை அமாவாசை - ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்! - Ramanathapuram
ராமநாதபுரம்: சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள அக்னித் தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
agni Seashore
கோடைவிடுமுறை என்பதாலும், ஃபோனி புயல் தாக்கம் இல்லாததாலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு, ஃபோனி புயல் அச்சத்தால் வெறிச்சோடி இருந்த கோயில் வீதிகள் இன்று பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.