தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் இறந்தவரின் சடலத்தை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் விபத்து! - ஆம்புலன்ஸ் விபத்து

ராமநாதபுரம்: திருவாடானை அச்சங்குடி அருகே கரோனா தொற்றால் இறந்தவரின் சடலத்தை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆம்புலன்ஸ் விபத்து

By

Published : Aug 4, 2020, 7:52 PM IST

மதுரை தனியார் மருத்துவமனையில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்தார். தேனி மாவட்டம், அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஐயப்பராஜா, இறந்த முதியவரின் சடலத்தை ஏற்றிக்கொண்டு கோட்டைப்பட்டினத்தை நோக்கி புறப்பட்டார்.
ஆம்புலன்ஸ் இன்று (ஆகஸ்ட் 4) அதிகாலை 5 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அடுத்துள்ள அச்சங்குடி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐயப்பராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ் உள்ளே கரோனாவால் இறந்தவரின் சடலம் இருந்ததால் மக்கள் யாரும் நெருங்கவில்லை. பின்னர் இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் ஜிப்ரி, சமூக ஆர்வலர்கள் வந்து இறந்தவரின் உடலை மீட்டு கோட்டைப்பட்டினம் கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து திருவாடானை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details