தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, எல்பி எஃப் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! - All unions protest
ராமநாதபுரம்: அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு அளிக்கும் தமிழக அரசின் திட்டத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![ராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! All unions protest in Ramanathapuram](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:20:24:1598349024-tn-rmd-01-transport-staff-protest-against-govt-move-privatation-of-buses-visual-script-7204441-25082020134311-2508f-1598343191-421.jpg)
All unions protest in Ramanathapuram
இதில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288 (A)-ஐ கைவிட வேண்டும். தனியார் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும். தொழிலாளியிடம் பறிக்கப்பட்ட விடுப்பையும், சம்பளத்தையும் திரும்ப அளிக்க வேண்டும்.
மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு கிடைத்துவரும் இலவச பயணச் சேவையை முறையாக செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.