ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை அதிமுக, பாஜகவிற்கு ஒதுக்கியுள்ளதால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தெரிவித்த அவர்கள், "இந்தக் கூட்டணி ஒதுக்கீடை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை அதிமுகவின் தலைமை, மறுபரிசீலனை செய்யாவிட்டால் இந்தத் தேர்தலை புறக்கணிப்போம். இந்தப் பகுதியில் பாஜக படுதோல்வி அடையும்.