ராமநாதபுரத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது. ராமநாதபுரம் தொகுதியில் கடந்த 3 முறை நடைபெற்ற தேர்தல்களில் திமுக நேரடியாக போட்டியிடவில்லை, 2016 தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியும், 2011 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மதிமுக போட்டியிட்டது. 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது.
இதனால் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி வந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தொகுதியில் திமுக களம் கண்டது. அக்கட்சியன் வேட்பாளராக காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கத்தை களமிறக்கியது.