தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவினர் குண்டு வீச்சு - தேவகோட்டையில் பரபரப்பு! - Admk Members involved in Rowdism

ராமநாதபுரம்: கமுதி ஒன்றிய கவுன்சிலர்களை கடத்தியது தொடர்பாக அதிமுக - திமுக இடையே தேவகோட்டையில் கடும் மோதல் ஏற்பட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

ADMK
ADMK

By

Published : Jan 11, 2020, 10:26 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 7, பாஜக 1, தேமுதிக 1 என அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் திமுக 7, சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால் அதிமுக - திமுக இடையே வெற்றி பெற்றுள்ள கவுன்சிலர்களை கைப்பற்றுவதில் பெரும் போட்டி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், திமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கணவர் போஸ் தலைமையில் திமுக தரப்பினர் ஒரு தேமுதிக கவுன்சிலர், 2 சுயேச்சை கவுன்சிலர்கள் உட்பட, 10 கவுன்சிலர்களை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புதுக்குறிச்சியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் வீட்டிற்கு கொண்டு வந்து பாதுகாத்தனர். இதையடுத்து, தேமுதிக கவுன்சிலரை மீட்பதற்காக கமுதி அதிமுக ஒன்றியச் செயலாளர் காளிமுத்து தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் 6 கார்களில் சென்றனர். இதனால் இருத்தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

பெட்ரோல் குண்டு

அப்போது, அதிமுக தரப்பினர் திமுகவினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதில் 4 கார்கள் சேதமடைந்தன. மேலும், திமுக தரப்பைச் சேர்ந்த போஸ், புதுக்குறிச்சியைச் சேர்ந்த விஜய் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த விஜய் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேவகோட்டை

இதையடுத்து உதவி எஸ்பி கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரனை செய்தனர். போஸ் கொடுத்த புகாரின் பேரில் காளிமுத்து, அவரது மனைவி முத்துபனியம்மாள் உட்பட 48 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் காளிமுத்து உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

தேவகோட்டை

இதையும் படிங்க: 'அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வேண்டும்' - தீர்ப்பு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details