தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஈரானில் சிக்கியுள்ள ராமநாதபுர மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்' - ஆட்சியர் - ஈரானில் ராமநாதபுரம் மீனவர்கள்

ராமநாதபுரம்: ஈரானில் சிக்கித் தவிக்கும் ராமநாதபுர மீனவர்கள் 22 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உறுதியளித்துள்ளார்.

collector veera raghava rao
collector veera raghava rao

By

Published : May 18, 2020, 5:27 PM IST

ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 25 நாட்டுப்புற கலைஞர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராமநாதபுரத்தில் மொத்தம் 4,888 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேரின் முடிவுகள் நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ராமநாதபுரத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்ல இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அளித்துள்ளனர். அவர்கள் அனைவரின் பட்டியலும் மாநிலம் வாரியாக பிரிக்கப்பட்டுவருகின்றன எனத் தெரிவித்தார். பின்னர், ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் ராமநாதபுர மீனவர்கள் 22 பேர் மத்திய, மாநில அரசுகள் வகுத்துள்ள விதிமுறைகளின் படி மீட்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'ஈரான் கப்பலை காரைக்கால் துறைமுகத்திலிருந்துத் திருப்பி அனுப்ப வேண்டும்' - அன்பழகன் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details