தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்’ எஸ்.பி., தகவல்! - victory celebration banned

ராமநாதபுரம்: நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என, எஸ்.பி., கார்த்திக் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி எச்சரிக்கை
எஸ்.பி எச்சரிக்கை

By

Published : May 1, 2021, 7:47 PM IST

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:’ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (மே.1) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

இதை முன்னிட்டு, 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியான அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி பகுதியில், 250 காவல் துறையினரும், ஒரு கம்பெனி துணை ராணுவப் படையினர் டிஎஸ்பி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்கள், அரசியல் கட்சி முகவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் 100 மீட்டருக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. முகவர்களும், அலுவலர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். வெற்றி கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’என்றார்.

ABOUT THE AUTHOR

...view details