தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் குருக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி புகார் - kanji vijayendhirar

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் நடந்த பிரச்னைகளுக்கு காரணமான குருக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் கோயில் இணை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் திருக்கோயில்
ராமேஸ்வரம் திருக்கோயில்

By

Published : Feb 24, 2021, 9:27 PM IST

தமிழ் பீடாதிபதிகளில் முக்கியமாகத் திகழ்பவர் காஞ்சி விஜயேந்திரர். காஞ்சி சங்கரமடத்தில் சிறப்பு யாகம், பூஜைகளில் ஈடுபட்ட அவர் பிப். 22ஆம் தேதி காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றார்.

அப்போது அங்கிருந்த குருக்கள் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து எல்லாரும் உள்ளே நுழைய முடியாது என்றும், பாரம்பரியமான மஹாராஷ்டிர பிராமணர்கள் அவரை கருவறைக்குள் செல்ல அனுமதி மறுத்தனர்.

இதன் பின் தமிழ் பிராமணருக்கும், மஹாராஷ்டிர பிராமணருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த அமைச்சர் ஓஎஸ் மணியன், ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர்கள் இரு தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி விஜயேந்திரரை கருவறைக்குள் செல்ல அனுமதித்தனர்.

இதையடுத்து, காஞ்சி விஜயேந்திரர் சிறப்பு தீபாராதனை செய்தார் என்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் ரகளையில் ஈடுபட்ட குருக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுகூறி கோயில் இணை ஆணையரிடம் புகார்மனு அளிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details