ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக நுட்புனராகப் (லேப் டெக்னிஷியன்) பணிபுரிபவர் பாத்திமா ரியாச சுல்தான் பேகம். இவர்
அரசு ஆவணம் ஒன்றைப் பெறுவதற்காக மண்டபத்திலுள்ள கருவூல அலுவலகத்தை அணுகினார்.
பாத்திமாக கோரிய ஆவணத்தைத் தருவதற்கு கருவூல அலுவலகத்தில் கணக்காளராகப் பணிபுரியும் களஞ்சிய ராணி (46) என்பவர் ரூ.1000 லஞ்சமாக கேட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், கணக்காளர் களஞ்சிய ராணி லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக கைதுசெய்தனர்.
மேலும், கருவூல அலுவலகத்தில் நடத்திய சோதனையில் உதவி கருவூல அலுவலர் செல்வகுமாரிடமிருந்த கணக்கில் வராத பணம் 13,650 ரூபாயையும் பறிமுதல்செய்தனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:போதை தலைக்கேறி பேருந்தை மறித்த ஆசாமி!