இராமநாதபுரம்: திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம், பாவோடி மைதானம், வட்டானம் விலக்கு ஆகிய பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கிடையில் ஒருவித அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
சாலையில் திரியும் மாடுகளால் விபத்து - latest news
ராமநாதபுரம் தொண்டி சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் தொடரும் வாகன விபத்துக்களை தடுக்க பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் திரியும் மாடுகளால் விபத்து
கடந்த சில நாள்களுக்கு முன்பு மாடு குறுக்கே சென்றதால் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எனவே, தொடர்ந்து நடக்கும் இந்த வாகன விபத்துக்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி