ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள அபிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சட்டவிரோதமாக கள் விற்பனை செய்த நபர் கைது! - குற்றச் செய்திகள்
ராமநாதபுரம்: கமுதி அருகே சட்டவிரோதமாக கள் விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சட்டவிரோதமாக கள் விற்பனை செய்த நபர் கைது!
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டவிரோதமாக கள் விற்பனை செய்து கொண்டிருந்த ராமசாமியை கைது செய்துனர். மேலும், அவரிடமிருந்து 10 லிட்டர் பனங்கள்ளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.