ராமநாதபுரம்: ஆர்.எஸ். மங்கலம் அருகே அனிச்சகுடி கிராமத்தில் காளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தரிசனத்திற்கு வருவோரிடம் ஒருவர் தகராறு செய்வதாக கோயில் நிர்வாகம் தரப்பில் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அனிச்சகுடியைச் சேர்ந்த மலைராஜ் என்பது தெரியவந்தது.
பின்னர், அவரைத் தேடி வீட்டிற்குச் சென்ற உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், காவலர் கண்ணன் ஆகியோர் மதுபோதையில் இருந்த மலைராஜை பிடிக்க முற்பட்டனர். ஆனால் மலைராஜ், உதவி ஆய்வாளரின் தலையில் அரிவாளால் வெட்டினார்.