ராமநாதபுரம் மாவட்டம், வஉசி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சிவபாலா. கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதுதொடர்பான வழக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கொலை
இந்நிலையில், இன்று காலை வழக்கு விசாரணை முடித்துவிட்டு சிவபாலா, சீதக்காதி சேதுபதி விளையாட்டு நுழைவாயில் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த கணவர் சரவணன் சிவபாலாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
வழக்குப்பதிவு
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிவபாலாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சரவணனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மனைவியைக் கொலை செய்த கணவனை கைது செய்யும் காவல் துறையினர் எஸ்.பி ஆய்வு
இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வுசெய்தார். மேலும் பட்டப்பகலில் மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளே நடைபெற்ற கொலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: பள்ளி ஆசிரியர் கைது!