தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! - Ramanathapuram tahsildar office fire

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு வாகனம் எரிந்து சாம்பலானது.

Ramanathapuram tahsildar office
Ramanathapuram tahsildar office

By

Published : Aug 12, 2021, 10:02 PM IST

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக.12) மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு ஜீப் ஒன்று முற்றிலும் எரிந்து சேதமானது.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைத்து, பிற பகுதிகளுக்கும் பரவாமல் தடுத்தனர். எனினும், அந்த இடத்தில் இருந்த மரம் ஒன்று முழுமையாக எரிந்து விழுந்தது. இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து பஜார் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : விருதுநகர் மீன் மார்க்கெட்டில் தீ விபத்து...பொருள்கள் எரிந்து சேதம்!

ABOUT THE AUTHOR

...view details