இது குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது சுகாதாரத் துறையின் சார்பாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிக அளவில் பரவுவதாக தகவல்கள் வருகின்றன. அதனடிப்படையில், இம்மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களுக்கு 'இ - பாஸ்' கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடைவீதிகள், வாரச்சந்தைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்துகள் போன்ற பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும் இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
இது நமது மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்க வழிவகுக்கும். முக்கவசம் அணியாதவர்கள், தகுந்த இடைவெளியை பின்பற்றாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அபராதம் விதிக்க சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை, உள்ளாட்சிதுறைச் சார்ந்த அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவலைக் ] கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த 10 லட்சம் ரூபாயை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!