ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம், மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் விசைப்படகு மீனவர்கள், தமிழ்நாடு அரசின் கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் அடிப்படையில் விசைப்படகு மீனவர்கள் ஐந்து கடல் மைல் தொலைவில் மீன்பிடி தொழிலில் ஈடுபடக்கூடாது என்ற சட்டம் உள்ளது.
பெரும்பாலான விசைப்படகுகள் ஐந்து கடல் மைல் தொலைவுக்கும் குறைவான பகுதியில் மீன்பிடித்து வருவதாக நாட்டுப்படகு மீனவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்தனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி தலைமையில், கடலோர மீன்பிடி சட்ட அமலாக்கப்பிரிவு காவலர், மீன்வளத்துறை ஆய்வாளர் கடந்த 10ஆம் தேதி முதல் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் விசைப்படகுகளின் மீன்பிடி கடல் தொலைவை ஆய்வு செய்யும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
படகில் நோட்டீஸ்ஒட்டும் அலுவலர்கள் அப்போது, ஐந்து கடல் மைல் தொலைவிற்கு குறைவான பகுதியில் மீன்பிடித்த ஒன்பது விசை படகுகள் கண்டறியப்பட்டு அவற்றை மீன்வளத்துறையின் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என படகின் உரிமையாளரிடம் தெரிவித்து படகில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.