ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ”ராமநாதபுரம் முழுவதும் 1900 ஆக்சிஜன் படுக்கைகள் எற்படுத்தப்பட்டுவருகிறது. ஒரு வாரத்தில் தயார் நிலையில் இருக்கும்.
11 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் தேவைப்படும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக அளிக்கப்பட்டு வருகிறது.