இலங்கையில் இருந்து தங்கம், வாசனை பொருட்கள் உள்ளிட்டவை இரவு நேரங்களில் படகுகள் மூலம் தமிநாட்டிற்கு கடத்தப்படுவதும் தமிழ்நாட்டில் இருந்து மருந்து பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்த கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி தூத்துக்குடி மத்திய வருவாய்த் துறை அலுவலர்கள் கடலோரப் பகுதிகளை கண்காணித்து வந்தனர்.