ராமநாதபுரம் : சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனின் 64ஆவது நினைவு நாள் இன்று (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அனுமதி பெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக சார்பாக முன்னாள் ஆதிதிராவிட அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.எல் ஏ முத்தையா ஆகியோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.