தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது - Rameswaram railway station

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 இளைஞர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது

By

Published : Jun 14, 2021, 10:28 PM IST

ராமேஸ்வரம் ரயில்வே நிலையப் பகுதியில், அதிகாலை காவல் ஆய்வாளர் கண்ணதாசன் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது, அங்கு இளைஞர்கள் சிலர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிவதைக் கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அந்த இளைஞர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். தொடர்ந்து, அவர்களை சோதனை செய்தபோது, வாள், கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது

இதனைத்தொடர்ந்து அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார், ராஜேஷ், ஹரிஹர சுதன், லோகேஸ்வரன் சத்திய நாராயணன் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் ராமேஸ்வரம் பகுதியில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details