ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள மரவெட்டி வலசை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், கல்கிணற்றுவலசையைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கடந்த மார்ச் மாதம், தேவா என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள், தேவாவின் தலையை, வெட்டி பேருந்துநிலையத்தில் வைத்துவிட்டுச் சென்றனர்.
ராமநாதபுரம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை: 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது! - ramanathaburam murder news
ராமநாதபுரம்: இளைஞர் ஒருவரின் தலையை அறுத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்த 6 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை தொடர்பாக உச்சிப்புளி காவல்துறையினர், ஆமு கார்த்திக், தினேஷ், திருஞானம், விஜய், மணிமாறன், தேவதாஸ் ஆகிய ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இன்று(மே30) இந்த ஆறு பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யும் படி, ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்-ன் பரிந்துரையின் பேரில், அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பிஎஸ்பிபி பள்ளி பாலியல் வழக்கு: கராத்தே மாஸ்டரை தூக்கிய போலீஸ்!