ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த குந்துகால் கடற்பகுதியில் தேசிய கடல் எல்லை அருகே சட்டவிரோதமாகப் படகின் மூலம் நடுக்கடலில் மஞ்சள் கடத்த இருப்பதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் அலுவலர்கள் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது சட்டவிரோதமாகப் படகின் மூலம் கடத்த முயன்ற சுமார் 500 கிலோ மஞ்சள் மூட்டைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்து ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் அலுவலகம் கொண்டுச் சென்றனர். இதனையடுத்து, கடத்தல்காரர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.