ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு வாழும் கடல் பசு, டால்பின் போன்ற பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
500 கிலோ எடைகொண்ட கடல் பசு உயிரிழப்பு! - கடல் பசு
ராமநாதபுரம்: மண்டபம் கடற்கரை அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 500 கிலோ எடை கொண்ட கடல் பசுவை வனத்துறையினர் மீட்டனர்.
Mandabam beach ramanathapuram
இந்நிலையில், புதுமடம் கடல் பகுதியில் கடல் பசு ஒன்று நேற்று (ஆகஸ்ட் 23) உயிரிழந்து, கரை ஒதுங்கியதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் உள்ளிட்ட வனக்காப்பாளர்கள் அங்கு சென்றனர்.
உயிரிழந்த கடல் பசுவை உச்சபுளி கால்நடை மருத்துவர் ஆய்வு செய்தார். அதில், இறந்தது பெண் கடல் பசு என்பது தெரியவந்தது. மேலும், அது 3 மீட்டர் நீளமும், 1.85 அகலமும் சுமார் 500 கிலோ இடையும் இருக்கும் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.