தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது பாட்டில்கள் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு! - liquor bottle theft in tasmac shop

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மதுபான கடை

By

Published : Aug 19, 2019, 6:54 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி – முதுகுளத்தூர் சாலை எட்டிச்சேரியில் அரசு மதுபான கடை ஒன்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் இரவு 10 மணிக்கு ஊழியர்கள் மதுக்கடையை அடைத்து விட்டு சென்றுள்ளனர். அதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மதுபான கடையின் முன்பக்கத்தின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்து அங்கு வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து பேரையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரத்திலிருந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details