கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்துவந்தனர்.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் சிறப்பு ரயில்களை இயக்கி குடிபெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைத்துவருகின்றன.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 458 பேர் (இரண்டு குழந்தைகள் உள்பட) சிறப்பு ரயிலில் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்களை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா இருவரும் அனுப்பிவைத்தனர். அங்கிருந்து செல்வதற்கு முன்பு அவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:'விரைவில் பயணிகள் ரயில் சேவை அதிகரிக்கப்படும்' - பியூஸ் கோயல்