தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் புதிதாக 44 பேருக்கு கரோனா உறுதி! - Corona death cases in ramanathapuram

ராமநாதபுரம்: கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில் புதிதாக 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 44 பேருக்கு கரோனா உறுதி!
Ramanathapuram corona cases

By

Published : Aug 12, 2020, 7:10 PM IST

ராமநாதபுரத்தில் கரோனா தொற்றால் 3ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 12) புதிதாக 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பரமக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 763ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று (ஆகஸ்ட் 11) வரை சிகிச்சைப் பெற்று குணமடைந்து 3ஆயிரத்து 229 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், கரோனாவால் சிகிச்சைப் பலனின்றி இன்று இருவர் உயிரிழந்தனர். இதன் மூலம் ராமநாதபுரத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details