தமிழ்நாட்டிலிருந்து இருந்து ராமேஸ்வரம் கடல் மார்க்கமாக இலங்கைக்குப் போதைப் பொருள்கள் கடத்தப்படுவது தொடர் கதையாகிவருகிறது. கடத்தலின்போது, கடற்படையினர், கடலோர காவல் படையினரின் ரோந்தில் சிக்கிவிடுவோ என்று கடத்தல்காரர்கள் கருதினால் கஞ்சாவைக் கடலுக்குள் வீசிவிட்டு செல்வர்.
கரை ஒதுங்கிய 40 கிலோ கஞ்சா: போலீஸ் விசாரணை! - pudhumadam seashore
ராமநாதபுரம்: புதுமடம் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய மூட்டையில், சுமார் 20 பொட்டலங்களில் 40 கிலோ கஞ்சா இருப்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
ராமநாதபுரம்
அந்த வகையில், புதுமடம் கடற்பகுதியில் சந்தேகப்படும் நிலையில் சாக்கு மூட்டை ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக உச்சிப்புளி காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்போரில், கரை ஒதுங்கிய மூட்டையைச் சோதனை செய்ததில், 20 பொட்டலங்களில் 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த காவல் துறையினர், கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.